
விழியின் ஓரமாய் ஒரு துளி குமுறல் !
அடுப்பில் உலை கொதிக்க ,
குண்டுகளின் சத்தம் காதை கிழிக்க ,
என்ன இது ஒரு தீபாவளி கொண்டாட்டம் ???என நினைக்க,
கனவு கலைந்து பார்க்கும் பொழுது ,
நானும் இன்னும் இலங்கை வாழ் தமிழன் என்று தான் உணர்ந்தேன் !
என் இந்திய நாட்டு தமிழர்களுக்கு வெடியின் சத்தம் ஒரு வித சப்தம் ,
என் ஈழத் தமிழர்களுக்கு எமனின் அழு குரலாகத்தான் இருக்கிறது வெடியின் சத்தம் ,
மதியை காட்டி சோறு ஊட்டுவாள் என் இந்தியத் தாய் ,
தன் கண்ணீரையும் கணவனையும் இழந்த துயரத்தில் சோறு ஊட்டுவாள் என் ஈழத் தாய்,
ஒவ்வொரு விடியலிலும் அச்சம் அகன்று வெளிச்சம் சுடர் விடுகிறது ,
எப்பொழுது என் இன மக்களுக்கு நல் வாழ்வு பிறந்து வாழ்வு சுடர் விடும் ??????
தமிழ்த்தாயே "இனியும் பொறுக்காதே ! காத்திடு உன் பிள்ளைகளை "
இது உன் மற்றொரு பிள்ளையின் அழுகை !
2.1.2009